உலகிலேயே தூய்மையான காற்று எங்குள்ளது தெரியுமா..!
Australia
By Sumithiran
உலகிலேயே அதிக தூய்மையான இயற்கை காற்று நிறைந்த பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கேப் கிரிம் என்று அழைக்கப்படும் இந்த தீபகற்ப பகுதி அவுஸ்திரேலிய தீவான டாஸ்மேனியாவின் வடமேற்கு முனையில் உள்ளது.
"உலகின் விளிம்பு"
"உலகின் விளிம்பு" என்று பிரபலமாக அறியப்படும் கேப் கிரிமிற்கு மிக குறைவானவர்களே சென்றுள்ளனர்.

காற்றின் தரத்தை அளவிடும் ஒரு நிலையம் இங்கு அமைக்கப்பட்டு, பூமியிலேயே இந்த பகுதியில்தான் மிகவும் சுத்தமான காற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.
பயங்கரமான காற்றுக்கு
அண்டார்டிகாவிலிருந்து மாசு அடையாத காற்றை எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் மணிக்கு 180 கிமீ வேகத்தில் வீசக்கூடிய பயங்கரமான காற்றுக்கு இப்பகுதி பிரபலமானது.

ஹவாய் தீவில் உள்ள மௌனா லோவா நிலையம், மக்குவாரி தீவு, அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் உள்ளிட்டவற்றில் தூய்மை நிறைந்த இயற்கை காற்று உள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்