டக்ளஸ் தலைமையில் இடம்பெறும் கூட்டங்களுக்கு தமிழ் எம்.பிக்கள் புறக்கணிப்பா...!
Jaffna
Sri Lanka Parliament
Douglas Devananda
Northern Province of Sri Lanka
By Sathangani
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெறுகின்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று (26) டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எருவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



