உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா..! காரணம் இது தான்
சர்வதேச ரீதியில் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், வேலையின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையே புரட்டிப்போடுகின்ற இந்த நிலையிலும், ஒரு நாடு 6 ஆண்டுகளாக மகிழ்ச்சியான நாடு என்ற பெயரை பெற்று வருகிறது.
அந்தவகையில், கணக்கெடுப்பில், உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெயரை பின்லாந்து பெற்றுள்ளது. இந்த நாட்டிலுள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் ஒரு போதும் எளிதில் ஏமாற்றமடையமாட்டார்கள் என சில விமர்சகர்கள் தெரிவிக்கின்ற அளவுக்கு இந்த நாடு சிறப்பானதாக விளங்குகின்றது.
உளவியலாளர் ஃப்ராங் மார்டெல்லாவின் கூற்றுபடி, இந்த நாடு மகிழ்ச்சியாக இருக்க 3 முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறுகிறார், இதை மற்ற நாடுகளும் பின்பற்றினால் அவர்கள் வாழ்விலும் மகிழ்ச்சியாக இருக்கலாம், மேலும் ஒற்றுமை உணர்வு இருக்கும், எந்த மோசமான சூழ்நிலையையும் எதிர்த்து போராடும் வலிமையை கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றுமையாக வாழ வேண்டும்
அனைவருடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே முதல் விதி, இந்த நாட்டு மக்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை கவனித்து கொள்ள சிறு வயதில் இருந்தே கற்பிக்கப்படுகிறார்கள், இது அவர்களின் வளர்ச்சியின் முக்கியமான பகுதியாகவும், அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும் என்றும் கற்பிக்கப்படுவதால், அவர்கள் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
பின்லாந்தில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் ஒவ்வொரு குடும்பமும், தங்களது அண்டை வீட்டாருடன் நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர், அனைத்து பிரச்சனைகளையும் வெளியில் சொல்வதன் மூலம் பாரம் குறையும், அப்படி தான் இந்த நாட்டில் அனைவரிடமும் அன்பாய் பழகுவதன் மூலம் மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.
சமமாக நடத்தப்படுகிறார்கள்
இரண்டாவது இங்குள்ள அரசு நிறுவனங்கள் எப்போதும் மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள், குடி மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால் அதனை உடனடியாக தீர்க்க முயற்சிப்பதால், மக்களுக்கு கவலை ஏற்படுவதில்லை என கூறப்படுகிறது.
மூன்றாவது தான் முக்கியமானது, பின்லாந்தில் பொது சுகாதார அமைப்பு உள்ளது, இங்கு அதிக வருமானம் பெறுபவர்களுக்கும், குறைவான வருமானம் பெறுபவர்களுக்கும் வித்தியாசம் பார்க்கப்படுவதில்லை, அனைவரும் சமமாக நடத்தப்படுவதால், ஏழ்மையும் இல்லை, ஊழல் குறைவாகவே உள்ளதால் மக்கள் சுதந்ததிரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |