மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை - தொடரும் ஆர்ப்பாட்டங்கள்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் இருந்து வருகிறார்.
இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, கடந்த ஜனவரி மாதம் முறைப்பாடுகள் எழுந்தன.
இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி கிடைக்கவில்லை
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின், பாலியல் தொடர்பாக விசாரிக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மீண்டும் நேற்று (23) மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மல்யுத்த வீராங்கணைகள் கூறியதாவது: "3 மாதங்கள் ஆகியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை அதனால் தான் மீண்டும் போராட்டம் நடத்துகிறோம்.
நாங்கள் நீதி கோருகிறோம். இன்னும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்படவில்லை." என தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு
2 நாட்களுக்கு முன்பு டெல்லி காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மல்யுத்த வீராங்கணைகள் மகளிர் ஆணையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி காவல்துறையினருக்கு , இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், 'மல்யுத்த வீராங்கனைகள் தந்த பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடு மீது வழக்குப்பதிவு செய்தாதது குறித்து விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.