முடிவுக்கு வந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு கப்பல் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இழப்பீட்டு தொகையானது, திறைசேரி செயலாளரிடம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்காததற்காக, அப்போது இந்த துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் நாலக கொடஹேவவும் கடல்சார் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையமும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு
குறித்த அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதத்திற்காக கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களில் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த உத்தரவை தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
