அதிர்ச்சியில் மும்பை அணி - வெளியேறினார் கிரீன்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில் சகலதுறை வீரரான கேமரூன் கிரீன் 6 ஓட்டங்களை எடுத்த நிலையில் காயம் அடைந்து வெளியேறினார்.
அன்ரிச் நார்ட்ஜ் வீசிய(144 கிமீ ) பந்தை எதிர்கொண்டபோது வலது ஆள்காட்டி விரலில் குறித்த காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்தவாரம் இடம்பெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி இவரை 17.7 கோடி இந்திய ரூபாவிற்கு வாங்கியிருந்தது.
அவரது விரலில் இருந்து இரத்தம் கொட்டியதால் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவுஸ்திரேலிய அணி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில்டேவிட் வோர்னரின் இரட்டைச்சதத்தால் அவுஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 386 ஓட்டங்கள் குவித்தது.
மெல்பர்னில் நடைபெற்று வரும்இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 189 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 12 பந்துபரிமாற்ற நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களை எடுத்தது.
குறித்த போட்டியில் உஸ்மான் கவாஜா 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் டேவிட் வோர்னர் 32 ஓட்டங்களுடனும், மார்னஷ் லபுஷேன் 5 ஓட்டங்களுடனும் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
லபுஷேன் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், வோர்னருடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார்.
டேவிட் வோர்னர்
இருவரும் தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி ஓட்டங்களை சேர்த்தனர். வோர்னர் 144 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் தனது 25-வது சதத்தை விளாசினார். 2020-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு அவர், அடித்த முதல் சதமாக இது அமைந்தது.
மறுமுனையில் தனது 37-வது அரை சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித்161 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்களுடன் இருந்த நிலையில் அன்ரிட்ஜ் நார்ட்ஜ் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஜோடி 239 ஓட்டங்களை குவித்து அசத்தியது.
சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வோர்னர் 254 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.இதற்கு முன்னர் இந்த சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் நிகழ்த்தி இருந்தார்.
200 ஓட்டங்கள்
200 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வோர்னர் வெளியேறினார்.
2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அவுஸ்திரேலிய அணி 91 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 386 ஓட்டங்கள் எடுத்தது.
அலெக்ஸ் காரே 9, டிரேவிஸ்ஹெட் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணிகைவசம் 7 விக்கெட்கள் இருக்க இன்று3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
