மீண்டும் திறக்கப்படவுள்ள யால தேசிய வனத்தின் 2 வலயங்கள்!
வறட்சியான காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, யால தேசிய வனத்தை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக குறித்த இரண்டு வலயங்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சுற்றுலாப் பயணிகள்
நிலவிய கடுமையான வறட்சியான வானிலை காரணமாக வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதியும், வீதி அமைப்புகளை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகளுக்காக தேசிய வனம் மீண்டும் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம் நிலங்களை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |