உலகின் பரபரப்பான போக்குவரத்துப் பாதைக்கு குறி - ஏமனின் ஹூதியின் அறிவிப்பு
செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாபுல் மந்தபு நீரிணையில் வர்த்தகக் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஏமனின் ஹூதி இயக்கத்தின் கடல்சார் ஒருங்கிணைப்பு அமைப்பு மறுத்துள்ளது.
அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையின் வழியான போக்குவரத்து தொடர்ந்து இலவசமாகவே உள்ளது என்றும் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
தெற்கு செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிப்பது குறித்து ஈரான் ஆதரவு ஹூதிகள் பரிசீலித்து வருவதாக பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.
கட்டணங்கள் குறித்த முன்மொழிவு
ஜூலை மாதம் ஹூத்தி அதிகாரிகள் தெஹ்ரானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, கட்டணங்கள் குறித்த முன்மொழிவு ஈரானிய அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது என்றும், இருப்பினும் அதனைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் அறிக்கையில் உள்ள வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

ஹூதி அமைப்பால் நடத்தப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் தங்களது "பாதுகாப்பான போக்குவரத்துச் சேவை ஒரு தன்னார்வ மற்றும் கட்டணமில்லா சேவையாகும்" என்று தெரிவித்துள்ளது.
"அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவோ அல்லது எந்தவொரு தகவலையும் வழங்கவோ வேண்டாம் என மையம் வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |