யோஷித ராஜபக்சவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அவசர அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (Bribery Commission) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வரும் 16 ஆம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத யுத்தம்
மகிந்த ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பயங்கரவாத யுத்தம் நிலவிய போது யோஷித ராஜபக்ச ஒரு சப்-லெப்டினன்ட் (Sub-Lieutenant) அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டார்.

கடற்படையில் இணைந்து தனது ஆரம்பக்கட்ட இராணுவப் பயிற்சியை முடித்த பின்னர் அவர் மேலதிக ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளைப் பெறுவதற்காகப் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் வெளிநாடு சென்று உயர் பயிற்சி பெற்றமையானது நாட்டில் நடைமுறையிலுள்ள விதிமுறைகளுக்கு முரணாக அமைந்திருந்தது என அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 20 மணி நேரம் முன்