யோசித - வசந்த கரன்னாகொட வழக்கு: அடுத்த மாதம் விசாரணைக்கு
Yoshitha Rajapaksa
Wasantha Karannagoda
High Court of Sri Lanka
By Sindu
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நவம்பர் 23 அன்று விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இவ்வழக்கின் முன்விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தகுதி தேர்ச்சியின்மை
தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யத் தவறியதாகக் கூறப்படும் யோசித ராஜபக்சவை, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ரோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, இவ்விரு பிரதிவாதிகளுக்கும் எதிராக இலஞ்ச ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |