யாழில் மதிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Jaffna
Accident
Death
By Sathangani
யாழில் (Jaffna) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் மந்திகை - மடத்தடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் வடமராட்சி - அல்வாய் கிழக்கை சேர்ந்த பிரபாகரன் பிரணவன் (வயது 23) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். போதனா மருத்துவமனை
உயிரிழந்த இளைஞர் கடந்த சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மந்திகை - மடத்தடி பகுதியில் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இதில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்