யாழில் அறுபது இலட்சம் பண மோசடி : யுவதி கைது

Sri Lanka Police Jaffna Crime Money
By Shalini Balachandran Mar 11, 2024 04:18 AM GMT

யாழ்ப்பாணத்தில் வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊரெழு பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியில் வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

மேற்படி தொடர்பகத்தில் வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல் மற்றும் விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளார்.

இலங்கைக்கு கடத்தப்பட்ட போலியான சிகரெட்டுகள்! இருவர் கைது

இலங்கைக்கு கடத்தப்பட்ட போலியான சிகரெட்டுகள்! இருவர் கைது

பண மோசடி

இந்நிலையில் அவரை நம்பி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களைச் சேர்ந்தவர்கள் பணத்தை வழங்கி வந்த நிலையில் அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.

யாழில் அறுபது இலட்சம் பண மோசடி : யுவதி கைது | Young Girl Arrested For Money Fraud In Jaffna

இவ்வாறு பணத்தை வழங்கியவர் தனது வெளிநாட்டு பயண ஏற்பாடுகள் தாமதமாகி வந்தமையால் அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட நிலை.!

வெளிநாட்டு காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட நிலை.!

பெண் கைது

குறித்த விசாரணையின் போது அப்பெண்ணின் வங்கி கணக்கு இலக்கம் ஊடாக சுமார் நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதனை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

யாழில் அறுபது இலட்சம் பண மோசடி : யுவதி கைது | Young Girl Arrested For Money Fraud In Jaffna

மேலும் கொழும்பு உள்ளிட்ட இதர பகுதிகளில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர்களாக செயற்படும் மோசடியாளர்கள், யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமக்கான முகவர்களாக சிலரை நம்பிக்கைக்காக அமர்த்தி அவர்கள் ஊடாக பெரும் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே இவர்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் குத்திக் கொல்லப்பட்ட இலங்கையர்கள்! இறுதி கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் குத்திக் கொல்லப்பட்ட இலங்கையர்கள்! இறுதி கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026