கனடாவில் குத்திக் கொல்லப்பட்ட இலங்கையர்கள்! இறுதி கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியையகள் அந்த நாட்டிலேயே இடம்பெறவுள்ளன.
கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கனடாவுக்கு சென்றதன் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.
நினைவேந்தல் நிகழ்வு
கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பர்ஹாவனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பத்தின் நினைவேந்தல் நிகழ்வு தனுஷ்கவின் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
இதில் உள்ளூர்வாசிகள், மகா சங்கரத்ன, இரு நாட்டு அரசு அதிகாரிகள் உட்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
தீவிர சிகிச்சை
அத்துடன், 19 வயது மாணவனின் தாக்குதலில் உயிர் பிழைத்து பலத்த காயங்களுக்கு உள்ளான தனுஷ்க விக்ரமசிங்க தற்போது இரண்டு சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முடித்த பின்னர் அவரை கவனித்துக் கொள்வதாகவும் ஒட்டாவிலுள்ள ஹில்டா ஜயவர்த்தனாராம விகாரை அறிவித்துள்ளது.
பிரேத பரிசோதனைகள்
இதேவேளை, உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய தனுஷ்கவின் சகோதரர் மற்றும் உறவினர்களை ஒட்டாவாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |