இலங்கை இளம் விரிவுரையாளர் நியூஸிலாந்தில் திடீர் மரணம்
களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய ருசிரு சித்ரசேன நியூஸிலாந்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (29) திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக்லாந்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
36 வயதான ருசிரு, நியூசிலாந்தில் உள்ள ஒக்லாந்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக காலமானதாக அவரது நண்பர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
யாழிலிருந்து திரும்பிய விரிவுரையாளர் விபத்தில் மரணம்
மேலும், களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவரும், மூத்த விரிவுரையாளருமான முனைவர் என்.டி.ஜி. குணேந்திர கயந்த 18 ஆம் திதி இரவு திடீரென ஏற்பட்ட விபத்தில் காலமானார்.
அவர் தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணம் நாகதீபத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு துரதிர்ஷ்டவசமான கார் விபத்தில் சிக்கினார்.
இறக்கும் போது அவருக்கு 46 வயது. அவரது மனைவி மற்றும் அவரது சகோதரரும் விபத்தில் இறந்தனர்.
குறுகிய காலத்திற்குள் களனி பல்கலைக்கு ஏற்பட்ட பேரிழப்பு
இதற்கிடையில், கடந்த 21 ஆம் திகதி, களனிப் பல்கலைக்கழகத்தின் நவீன மொழிகள் துறையின் மூத்த பேராசிரியர் நீலாக்சி பிரேமவர்தன காலமானார்.
59 வயதான மூத்த பேராசிரியரின் அகால மரணம் களனிப் பல்கலைக்கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
ஒரு சில நாட்களுக்குள் திடீரென மூன்று பேராசிரியர்கள் உயிரிழந்தமை களனிப் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
