யாழ்.நோக்கி வந்த பேருந்தில் வெடிமருந்து கொண்டு வந்த இளைஞன் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Shadhu Shanker
யாழ்ப்பாணம்(Jaffna) நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பேருந்தினை மறித்து சோதனையிட்டுள்ளனர்.
காவல்துறையினரால் கைது
அதன் போது பேருந்திலிருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து (ரி.என்.ரி) மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து , அதனை கொண்டு வந்த அரியாலை பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி