யாழ். கடலில் குளிக்க சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு
யாழ் (Jaffna) - சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(21.03.2025) இடம்பெற்றுள்ளது.
கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த 22 வயதுடைய பி.சாருஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அலையில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன்
சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக இன்று(21) மதியம் இளவாலை, சேந்தாங்குளம் கடலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, கடலில் குளித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மக்களின் கோரிக்கை
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
மேலும், குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுகிறமையினால் உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்