திருமலையில் பரிதாபமாக பலியான மீன் பிடிக்க சென்ற இளைஞன்!
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
திருகோணமலை குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட இறக்கக் கண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (21) இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இறக்ககக் கண்டி வாழை ஊத்து பகுதியை சேர்ந்த என்.அப்சான் என்ற 22 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்