கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன்! தேடும் பணிகள் தீவிரம்
Sri Lanka Police
Colombo
By Laksi
தங்காலை, மாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தங்காலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பெலியத்தை, தெமட்டாவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கடலில் மூழ்கி காணமல் போயுள்ளார்.
இளைஞனை தேடும் பணிகள்
மாவெல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்த அவர் பலருடன் கடலில் நீராடும் போது அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுக் காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், காணாமல் போன இளைஞனைத் தேடும் நடவடிக்கையை தங்காலை கடற்படையின் சுழியோடல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்