முரசுமோட்டையில் நள்ளிரவில் இடம்பெற்ற கோரவிபத்து -ஸ்தலத்தில் இளைஞன் பலி
Death
Accident
Kilinochchi
Murasumoddai
By Vasanth
கிளிநொச்சி பரந்தன் முல்லை வீதி முரசுமோட்டை பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பருடன் பரந்தனில் இருந்து தர்மபுரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தர்மபுரத்தை சேர்ந்த 21 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.
டிப்பரை செலுத்திவந்த சாரதி விபத்து இடம்பெற்ற இடத்தில் டிப்பரை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி