29 வயதுடைய மகனை படுகொலை செய்த தந்தை : வெளியான காரணம்
Sri Lanka Police
Nuwara Eliya
Crime
By Raghav
நுவரெலியா (Nuwara Eliya) - பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர், அவருடைய தந்தை மற்றும் சகோதரனால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் நேற்று (30.12.2024) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இறந்தவருடைய,தந்தை மற்றும் சகோதரனுடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் இருவரும் தடிகளைக்கொண்டு குறித்த நபரை கொலை செய்யதுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில் கைதான இருவரும் காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்