நண்பர்களுடன் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்
எகொடஉயன காவல்துறை பிரிவுக்குட்பட்ட மோதர கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
கடலில் தனது நண்பர்களுடன் இன்று (01) நிலையிலேயே அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன இளைஞன் மேலும் இரு இளைஞர்களுடன் கடலில் நீராடச் சென்றிருந்த நிலையில் திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், எகொடஉயன மீனவர் இல்லத்தில் வசிக்கும் 19 வயதுடைய சுபுன் சதுரங்க என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இளைஞனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பிரதேசவாசிகளும் காவல்துறையினரும் முன்னெடுத்த போதிலும், அவரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எகொடஉயன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்