சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய படங்களை விற்ற இளைஞன் சி்க்கினார்
                                    
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Crime
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    பொலனறுவை அரலகங்வில பிரதேசத்தில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய படங்களை விற்பனை செய்த 24 வயது இளைஞன் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் அந்தப் பிரிவின் சமூக ஊடகப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிவரதாரிய என்பவருக்கு ஆபாசமான காட்சிகளை விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரின் கைத்தொலைபேசியில்
சந்தேக நபரின் கைத்தொலைபேசியில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய சுமார் 7000 படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பொலனறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்