கொழும்பில் விபத்து! சிறுவன் உயிரிழப்பு
கொழும்பிலுள்ள ஹைலெவல் வீதி மீகொட சந்திக்கு அருகில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
மது போதையில் கவனக்குறைவாக காரை செலுத்தி வந்த சாரதியின் தவாறால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஹெட்டியவத்தை பகுதியைச் சேர்ந்த தரம் ஆறில் கல்வி கற்கும் வினிது சத்சர என்ற சிறுவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த சிறுவனை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளைப் பெற்று கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்று வருகிறார்.
சிறுவனின் தந்தை மற்றும் காரை ஓட்டிச் சென்றவர்களும் பலத்த காயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவன் பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.