சங்குப்பிட்டி பாலத்தில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்
பூநகரி - சங்குப்பிட்டி பாலம் (Sangupiddy Bridge) அருகே இனங்காணப்படாத இளம் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் நேற்று (12.10.2025) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் ஒரு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று சுமார் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
எனினும், உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு சடலத்தை மீட்க உத்தரவிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பூநகரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
