இலங்கைக்கு 96 கிலோகிராம் கஞ்சாவுடன் வரவிருந்த தமிழக இளைஞன் சிக்கினார்!
india
arrest
sri lanka
people
By Shalini
தமிழகம் - நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்குப் படகு மூலம் 96 கிலோகிராம் கஞ்சாவைக் கடத்திச் செல்ல முயன்ற இளைஞரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடத்தலுக்காக பயன்படுத்தப்படவிருந்த படகையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, வேதாரண்யம் கடலோரக் காவல் படையினர் இரகசிய கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகிலிருந்து 3 மூட்டைகளில் பொதியிடப்பட்டிருந்த 96 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 33 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.