இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் - யாழில் இளைஞன் கைது
Sri Lanka Police
Jaffna
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இணுவில் கிழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
இணைந்து நடாத்திய தேடுதல்
கோப்பாய் 51ஆவது படைப்பிரிவின் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்றைய தினம் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சுன்னாகம் காவல்துறையினர் இணைந்து நடாத்திய தேடுதலின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்