யாழில் போதை மாத்திரைகளுடன் சுற்றிவளைக்கப்பட்ட 20 வயது இளைஞர்
யாழில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருபது வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (12) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதை மாத்திரை
யாழ்ப்பாணம் காவல் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 1 மணி நேரம் முன்