12 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞன் கைது!
சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 18.672 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், இரண்டு கைபேசிகள் மற்றும் ஒரு இலத்திரனியல் தராசு என்பன கவால்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் களஞ்சியசாலை
விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, பண்டாரகம மஸ்வில வெந்தேசி வத்த பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட காவல்துறையினர், சந்தேக நபரையும் போதைப்பொருள் இருப்பையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான பானந்துர கூடு சலிந்து மற்றும் துபாயில் பதுங்கியிருக்கும் ரவிஷ்க ஆகியோரின் போதைப்பொருள் வலையமைப்பில் இயங்கி வந்தவர் என்பதும், அவர்களின் போதைப்பொருள் களஞ்சியசாலையின் பாதுகாப்பாளராகச் செயற்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |