சட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு இளைஞன் பலி
Vavuniya
Sri Lanka Police Investigation
By Vanan
வவுனியா - குடாகச்சிக்கொடியவில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நாட்டு துப்பாக்கி ஒன்றும் பலியானவர் அருகில் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குடாகச்சிக்கொடிய மானேரிக்குளம் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சென்ற இளைஞன் ஒருவரே அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.
மேலதிக விசாரணை

குடாகச்சிக்கொடிய மேதாமாவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய உமேஸ் லக்சன் என்கிற இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மடுக்கந்தை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி