மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்!
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை அத்தனகடவல யாய 31 பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ணையில் இருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்த போது காட்டு யானை குறித்த நபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த நபரை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு காட்டு யானை இழுத்துச் சென்றுள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கிராமத்தை சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டுள்ள போதும் அதில் மின்சாரம் இல்லாத காரணத்தால் காட்டு யானைகள் இவ்வாறு கிராமத்திற்குள் நுழைவதாக கிராமவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
சடலம் அத்தனகடவல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.