தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞனுக்கு நடந்த அவலம்
திருகோணமலை பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈச்சிலம்பற்று பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இன்று (28) காலை பூநகர் பனிச்சங்குளம் குளத்திற்கு நண்பருடன் தாமரைப் பூ பறிப்பதற்காக பைபர் படகில் சென்றுள்ளார்.
கவிழ்ந்த படகு
இந்நிலையில், படகு கவிழ்ந்தமையால் இருவரும் நீரில் மூழ்கியதுடன் நண்பனை காப்பாற்ற முடியாத நிலையில் மற்றைய இளைஞன் நீந்தி கரைக்கு வந்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |