வவுனியாவில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி
By Thulsi
வவுனியா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் வவுனியா, செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றதாக செட்டிகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார்.
மேலதிக விசாரணை
மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், அதே திசையில் மெனிக்பாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியும் ஒன்றோடொன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி செட்டிகுளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்