யாழில் மரணச்சடங்கு நிகழ்வில் வாளுடன் இளைஞர்கள் கைது!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sumithiran
யாழ்ப்பாணம்(jaffna) வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட வட்டுதெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
அதே பகுதியில் மரணச் சடங்கு ஒன்று இன்றையதினம் நடைபெற்றது. அந்த மரணச் சடங்கு நடந்த இடத்தில் இருந்த சில இளைஞர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது. இது குறித்து வட்டுக்கோட்டைகாவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.
வாளுடன் மூவர் கைது
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தந்ததும் சிலர் தப்பிச் சென்றனர். அங்கு நின்ற மூவர் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 6 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்