போர் இல்லாமல் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான தக்க சான்று -ஒபாமா
போரில்லாமல் பயங்கரவாதத்தை அழிக்க முடியும்
“9/11 தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அல்-கொய்தாவினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது ஒரு சிறிய அளவிலான அமைதியை வழங்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று ஒபாமா டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்
"9/11 தாக்குதல் நடந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக இருந்தவர்களில் ஒருவரும், அல்-கொய்தாவின் தலைவராக இருந்தவரும் பின்லேடனின் வாரிசும் இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஜவாஹிரி தங்கியிருந்த வீடு
"இது அதிபர் பிடனின் தலைமைத்துவத்திற்கும், இந்த தருணத்திற்காக பல தசாப்தங்களாக உழைக்கும் உளவுத்துறை சமுகத்தின் உறுப்பினர்களுக்கும், ஒரு குடிமகனுக்கு கூட சேதம் ஏற்படுத்தாமல் தாக்குதலை நிகழ்த்திக்காட்டிய பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களுக்கும் மரியாதை" என்று ஒபாமா மேலும் தெரிவித்துள்ளார்.
