இலங்கை அதிபர் தேர்தல்: ஒரு கோடிக்கு அதிகமானோர் வாக்களிக்க தகுதி!
2024ஆம் ஆண்டிற்கான அதிபர்த் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த தொகையில் 18 வயதை பூர்த்திசெய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அதிபர் தேர்தலுக்கு 1000 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடிக்கு அதிகமானோர்
இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவேடுகள் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை நேற்று(9) ஆரம்பித்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாகவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்காளர் பதிவேட்டில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள், தங்களின் பெயர்களை உரிய பட்டியலில் சேர்க்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |