சுடுநீருக்கு 100 ரூபாய் கட்டணம்: நுகர்வோர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையில் ஒரு கடையொன்றில் ஒரு கோப்பை சுடுநீர் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மையென உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அந்த கடையின் கட்டண ரசீது நுகர்வோர் முன்னணியிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தண்ணீருக்கு கட்டணம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "இது ஒன்று தான் தெரிந்த விடயமாக பேசப்படுகின்றது.மக்கள் அவசரத்திற்கு சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரை குடிக்கின்றார்கள்.
இப்படி ஒரு கோப்பை தண்ணீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. இது மிகப்பெரிய அநியாயம். இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக நுகர்வோர் ஆணையத்திடம் முறைப்பாடு செய்துள்ளோம்.
நுகர்வோர் சட்டத்தில் கூட இப்படி ஒரு தண்ணீருக்கு பணம் வசூலிக்க அதிகாரம் இல்லை. இதற்கு தொழிலதிபர்களை குறை சொல்ல முடியாது.
பொருளாதார நெருக்கடி
நாமெல்லாம் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். மின் கட்டணம் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. அதனால் அனைவருக்கும் கடினமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறு செய்கின்றார்கள்.
எனினும் இதனை அனுமதிக்க முடியாது. இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும். இதை இங்கிருந்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும்.
சாமானியர்கள் பாதிக்கப்படுவார்கள். முறையான கட்டுப்பாடு இல்லாதது தான் இதற்கு காரணமாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |