கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடந்த பொது நிகழ்வு!
அதிபர் ரணில் தலைமையில் 10,000 காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுக்கு வந்த மக்களுக்கு உணவு வழங்க ஒன்றரை கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளைக்கு வந்த பேருந்து ஒன்றுக்கு 40,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காணி உறுதிப்பத்திரம்
யாழ்ப்பாணம், பொலன்னறுவை, திருகோணமலை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 10,000 பேர் தம்புள்ளைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு வழங்க 15 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
உணவுக்காக ஒருவருக்கு 1500 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தம்புள்ளைக்கு வந்த மக்களுக்கு உணவு மட்டுமன்றி போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
தற்போதைய நெருக்கடியான நிலையில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் ஊடாக ஏற்பாடு செய்திருக்கலாம்.
இதன்போது மக்களுக்கு உரையாற்றி காணி உறுதிப்பத்திரங்களை வழங்கியிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |