கொரோனாவால் பரிதாபகரமாக பலியான 10 குழந்தைகள்
srilanka
corona
baby
death
By Jaso
இலங்கையில் கொரோனா தொற்று இன்னும் குறைவடையாத நிலையில் நாளாந்தம் மரணங்கள் சம்பவித்த வண்ணமே உள்ளன.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 10 குழந்தைகள், பொரள்ளை சீமாட்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், 490 குழந்தைகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தைகளுள் எந்தவொரு குழந்தைக்கும் வைத்தியசாலைக்குள் வைத்து கொரோனா தொற்றவில்லை என்றும் இவர்கள் அனைவருக்கும் சமூகத்திலிருந்தே தொற்றியுள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்