மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை
Sri Lanka Tourism
Tourism
Economy of Sri Lanka
By Thulsi
இலங்கைக்கு (Sri lanka) முதல் ஐந்து மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது.
குறித்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்ட வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
அதன்படி, மே மாதம் 25 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,006,097 ஆக பதிவாகியுள்ளதாக அதிகார சபை கூறியுள்ளது.
மேலும், மே மாதத்தில் மே 25 வரை மேலும் 109,213 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் (India) இருந்து 31,635 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ள நிலையில் இது 34.5 சதவீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி