தொடர்ச்சியாக கோப் குழுவில் இருந்து வெளியேறிய 10 எம்.பிக்கள்
கோப் எனப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து இன்றும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர்.
அதன்படி, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து இதுவரையில் 10 பேர் விலகியுள்ளனர்.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நேற்றுமுன்தினமும், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சரித்த ஹேரத், இரா.சாணக்கியன், ஹேஷா விதானகே, காமினி வலேபோட, எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் நேற்றைய தினமும் குறித்த குழுவில் இருந்து விலகினர்.
காரணம்
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, துமிந்த திஸாநாயக்க, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இன்றும் கோப் குழுவின் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
அத்தோடு, அந்தக் குழுவின் புதிய தலைவராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |