கிளப் வசந்த கொலை: சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் முன்னிலை
கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட 10 சந்தேக நபர்களும் பலத்த பாதுகாப்புடன் கடுவலை(Kaduwela) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (05) திங்கட்கிழமை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிளப் வசந்த படுகொலை
மேலும், பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிளப் வசந்தவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த குற்றச் செயல் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
மேலும், அவர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களிடம் உதவி நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |