தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தொடருந்து சாரதிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
இதன் காரணமாக இன்று (08) காலை 10 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடருந்து திணைக்கள துணைப் பொது மேலாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.
பணிப்புறக்கணிப்பு
பதவி உயர்வு வழங்கப்படாமை, ஆட்சேர்ப்பில் நிலவும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இவர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
தொடருந்து சாரதிகள் நேற்று முன்தினம் (06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தொடருந்து சாரதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியதன் காரணமாகவே தொடருந்து பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிட்டதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்