புதுமணத் தம்பதிகள் உட்பட 100 பேருக்கு ஏற்பட்ட நிலை
sri lanka
wedding
people
By Shalini
புத்தளம் - முந்தலம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வழிமுறைகளை மீறி திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களை எச்சரித்துள்ளனர்.
மேலும், இதில் கலந்து கொண்ட சுமார் 100 பேருடன் மணமக்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த திருமணத்தை நடத்த எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.