ஈரானின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் : 100 அமெரிக்கப்படையினர் காயம்
இந்த மாதம் மத்திய கிழக்கு முழுவதும் உள்ளஅமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களில் சுமார் 100 அமெரிக்கப் படை வீரர்கள் காயமடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் கூறியதாகத் தெரியவருகிறது. பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல், சிபிஎஸ் நியூஸிடம் அளித்த அறிக்கையில் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.
காயமடைந்தவர்கள் மீண்டும் பணிக்கு
அதில், "ஜூலை 7, 2026 முதல் கிட்டத்தட்ட 100 பேர் ஏதேனும் ஒரு வகையில் காயமடைந்ததாகக் கருதப்படுகிறார்கள்," என்றும், அவர்களில் 96% பேர் பின்னர் பணிக்கு திரும்பிவிட்டனர் என்றும் கூறினார்.

"அவர்கள் மீண்டும் போரில் ஈடுபட உறுதியாக உள்ளனர். ஏற்பட்ட காயங்களில் பெரும்பாலானவை லேசான மூளையதிர்ச்சிகளே," என்று அவர் குறிப்பிட்டார்.
பதிலடி தாக்குதலை நடத்தும் ஈரான்
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் தெற்கு ஈரானைக் குறிவைத்து நடத்தப்பட்டன. அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் பல பிராந்திய நாடுகளில் உள்ள அமெரிக்க வசதிகள் மற்றும் தளங்களைக் குறிவைத்து, தெஹ்ரான் பதிலடித் தாக்குதல்களை நடத்திவருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்