1000 ஆக உயரப்போகும் பாடசாலைகள் : மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்
பொருளாதார மாற்றத்தின் இன்றியமையாத அங்கமாக அரசாங்கம் தயாரித்துள்ள தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு நேற்று (11) அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் அலுவலகத்தில் கூடியது.
2000 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் 08 பாடங்கள் ஆங்கில வழியில் கற்பிக்க ஆரம்பிக்கப்பட்டு 24 வருடங்கள் கடந்துள்ள போதிலும் 765 பாடசாலைகளில் மட்டுமே ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த
ஆங்கில வழியில் கல்வி கற்க சமூகத்தில் பெரும் கிராக்கி நிலவுவதால், இந்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த, தேசிய கல்விக் கொள்கை குறித்த நேற்றைய அமைச்சரவை துணைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 200,000 மாணவர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்க முடியும்.
குறித்த அமைச்சரவைக் குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த உள்ளிட்ட 08 அமைச்சர்கள் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |