பாடசாலை மாணவர்களுக்கான 10,000 ரூபாய் கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த மாணவர்களுக்கான 10,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் இன்று (14) அறிவித்துள்ளது.
இக்கொடுப்பனவிற்கான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதீட்டுத் திட்ட உரை
அரசாங்கத்தினால் ஏற்கனவே 15,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் இந்த புதிய கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மைய பாதீட்டுத் திட்ட உரையின் போது அறிவித்ததற்கிணங்க, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் இதன் மூலம் மொத்தம் 25,000 நிதியுதவி கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |