கெரண்டிஎல்ல கோர பேருந்து விபத்து : திடீர் பரிசோதனையில் சிக்கிய பேருந்துகள்
பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட ஐந்து பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் (Priyantha Weerasuriya) உத்தரவின் பேரில், நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துகளை பரிசோதிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், இன்று (15.05.2025) கினிகத்தேன காவல்துறையினரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
விசேட பரிசோதனை
மேலும், ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் உள்ள கினிகத்தேனவின் அம்பகமுவ பகுதியில் நீண்ட தூர சேவை பேருந்துகளின் பரிசோதனை நடைபெற்றது.
இந்த நடவடிக்கையின் போது, பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட05 இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள், 06 தனியார் பேருந்துகள் உட்பட 11 சாரதிகள் மீது ஹட்டன் (Hatton) நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பேருந்து சாரதிகளுக்கு குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து பரிசோதனையின் போது, பயணிகளை விழிப்புணர்வு செய்யும் வகையில், பேருந்து சாரதிகள் போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
கடந்த 11ஆம் திகதி கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 23பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பேருந்துகள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
