வீதியோர மீன் விற்பனைக்கு அதிரடி தடை! சம்மாந்துறை நீதிமன்றின் கடும் உத்தரவு

Tamils Sri Lanka Fish
By Farook Sihan Oct 01, 2026 03:22 PM GMT
Report

சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதகமான வகையில் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வீதியோரங்களில் சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபட்ட 11 வியாபாரிகளுக்குத் தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 1,10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் பேக்கரி உரிமையாளரின் மனைவி படுகொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை

மட்டக்களப்பில் பேக்கரி உரிமையாளரின் மனைவி படுகொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை

சுகாதார அதிகாரிகள்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 17.09.2026 அன்று வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 வர்த்தகர்களுக்கு எதிராகச் சுகாதார அதிகாரிகளால் பி அறிக்கை (B Report) மூலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

வீதியோர மீன் விற்பனைக்கு அதிரடி தடை! சம்மாந்துறை நீதிமன்றின் கடும் உத்தரவு | 11 Fish Vendors Fined In Sammanthurai

குறித்த வழக்குச் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (01-10-2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேரில் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராகப் பிடிவராந்து பிறப்பித்த நீதிவான், அவருகான வழக்கினை எதிர்வரும் 17-12-2026 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மீன் விற்பனை 

அதேவேளை மன்றில் முன்னிலையான ஏனைய 11 மீன் வியாபாரிகளும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்குத் தலா 10,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

விசாரணைகளின் போது நீதிவான் இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பயணிக்கும் வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் உள்ளூர் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள சந்தைப் பகுதிகளில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகளுக்குத் தெளிவாக அறிவுறுத்தி உத்தரவிட்டார்.

வீதியோர மீன் விற்பனைக்கு அதிரடி தடை! சம்மாந்துறை நீதிமன்றின் கடும் உத்தரவு | 11 Fish Vendors Fined In Sammanthurai

பொதுச் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இச் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, வீதியோரங்களில் மீண்டும் மீன் விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றித் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரிசி கொள்கலனில் இரும்பு உலோகக் கழிவுகள்: மடக்கி பிடித்த சுங்கத்துறையினர்

அரிசி கொள்கலனில் இரும்பு உலோகக் கழிவுகள்: மடக்கி பிடித்த சுங்கத்துறையினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019