யாழில் பரிதாபமாக பலியான 11 வயது சிறுவன்...!
காய்ச்சலும், வலிப்பும் ஏற்பட்ட சிறுவன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொல்லன்குளம் - வீரன்குளம், மன்னார் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து நித்தியாஸ் (வயது 11) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனுக்கு கடந்த 24 ஆம் திகதி காய்ச்சலும் மற்றும் வலிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, 25 ஆம் திகதி மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் பின்னர் அன்றையதினமே குறித்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு குறித்த சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், சிறுவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 11 மணி நேரம் முன்