சாதனையை தேடி இலங்கையை சுற்றும் 11 வயது தமிழ் சிறுவன்
கிளிநொச்சி கோணாவில் (Konavil) பகுதியைச் சேர்ந்த11 வயதுடைய மாணவன் இலங்கையை (Sri lanka) சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.
நடைப்பயணமானது இன்று (25) காலை 8.30 மணி அளவில் கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முரளிதரன் டிலோஜன் எனும் மாணவனே இவ்வாறு நடை பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.
இச்சிறுவனின் நடை பயணமானது கிளிநொச்சி (Kilinochchi) கந்தசாமி ஆலயம் முன்பாக ஏ9 வீதியில் ஆரம்பிக்கப்பட்டு பரந்தன் ஊடாக முல்லைத்தீவு சென்று கரையோர பிரதேசமாக வெளியோயா, மட்டக்களப்பு, திருகோணமலை (Trincomalee) இவ்வாறு கரையோர பிரதேசமாக தனது நடை பயணத்தை தொடர்ந்து மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி மீண்டும் வர உள்ளார்.
சாதனைக்கான பயணம்
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடையாத நிலையில், சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் குறித்த பயணம் இன்று ஆரம்பித்ததாக அவரது தந்தை குறிப்பிடுகிறார்.
குறித்த பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களுமாக இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்து பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |